ஆ ஆகா அது இது எது !!
ஆ ஆகா அது இது எது !!
எங்கள் நிறுவனத்தில் ஜனவரி மாதம் கொஞ்சம் பரபரப்பா இருக்கும், பட்ஜெட் approval ஆகி நிலுவையில் இருந்தfuture projects எல்லாம் கிளற ஆரம்பித்து மீட்டிங் மேல மீட்டிங் என்று ஆரம்பித்து பின் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது ஒருபக்கமிருக்க , உற்பத்தி துறை சம்பந்தப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு இது முக்கியமான மாதம், புதிய contract நிறைய sign off ஆகி நெறைய requirements IT க்கு தான் வந்து குவியும், அது தொடர்பாக மீட்டிங்ஸ் வேற, அது போதாது என்று 80 வயதாகி இன்னமும் Ashwin தாத்தா போல் ஜிம்மிகிட்டு இருக்கும் எங்கள் chairman திரு.Gordon Diamond தன் கலை ஆர்வத்தை அலுவலகம் முழுவதும் அறிய படங்களால் அலங்கரித்து வைத்து இருப்பார் , அதை காண்பிக்கிறேன் பேர்வழி என்று customerக்கு சுற்றி காண்பித்து கொண்டு surprise என்ட்ரி வேறு !!
இப்படி ஒரு சூழலில் தான் இது வரும் எனக்கு , அதாங்க ஆ ... ஆஃ...ஆங் ஆகா என்று வரும் பாருங்க ஒரு தூக்கம் .. அது என்னை பல முறை மானத்தை வாங்கி இருக்கு, இதெல்லாம் எங்க உருப்பட போகுது என்று சாபம் விட்ட Physical Chemistry professor , எருமை மாடே , பாடம் சொல்லிக்கொடுக்கும் பொது தூங்காதே என்று திட்டிய அம்மா, Requirement gathering meetings இல் கொட்டாவி விட்டபோது முறைத்த manager இவர்கள் எல்லோரும் கண் முன்னே மூக்கை விடைத்து கொண்டு விரிய கணினி திரை மசமச வென்று தெரியும் தருணம் சொர்கம். அதுவும் பெருகி வரும் கொட்டாவியை அடக்க வாயை இறுக்கி மூடி வைக்க நான் படும் பாடு இருக்கே அது ஒரு divine பீலிங் , இது நம்மில் பலர் அனுபவித்து இருப்போம்.
இது ஒருபக்கம் இருக்க, வீட்டுக்கு வந்து தூங்க வேண்டிய நேரத்தில் தான் அது.. வராது... ஏதாவது வெட்டி வேலை பார்த்து முதலாளியம்மாவிடம் லட்சர்ச்சனை வாங்க வழி வகுக்கிறது. இப்படியே பல நாள் போய் கொண்டிருக்க இந்த வாரம் முழுதும் இரவில் ஆழ்ந்த உறக்கம் . அட என்னடா இது , இப்டி தூங்குதே என்று மனைவி பார்த்து வியக்கும் அளவுக்கு இருந்தது. அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ .. ஆகா எதுவாக தான் இருக்கும் அந்த காரணம் என்று இல்லாத பாயை பிராண்ட வைத்து என் தூக்கம் .
பளீரென அறை விழுந்தது சுய உணர்வு பெற்ற தருணம் அது.
நடந்துகொண்டிருப்பது Flu சீசன் ,Kindergartenஇல் இருந்து மகள் வாங்கி வந்த சொத்து அகத்தில் இருக்கும் மற்றோர்க்கு பரவாதிருக்கும் பொருட்டு என் அருகில் தூங்கட்டும் என்ற ஏற்பாட்டை செய்தாள் அருமை மனைவி . Rightu செத்தாண்டா சேகரு என்று புலம்பியவாறே சென்றேன். 5 வயது ஆகியும் மகளை தூங்க வைப்பது எப்போதுமே எங்களுக்கு nightmare தான். Bed தடவை story சொல்லு என்று பத்தாவது கதை சொல்லியும் தூங்க மாட்டாள் செல்ல மகள். அப்படிருக்க இந்த வாரம் கொஞ்சம் ஹோமேஒர்க் செய்து கொண்டு குரங்கு குல்லா கதை தெனாலி ராமன் கதை என்று, சில சமயம் சொந்த கடையும் சொல்லி,கதை சொல்லும் நானே கதையின் நாயகன் ஆனேன். Viccs Vaporub இன் புண்ணியத்தாலும் , இந்த கதைக்ககாலும் ஐந்தாவது நிமிடத்தில் தூங்கியது மகள் மட்டுமல்ல, இந்த வளர்ந்த எருமையும் தான்.
ஆகா என்னவொரு உறக்கம். சிற்றஞ்சிறு காலை என் காலின் கீழ் இடுக்கி , ஒரு கையை என் முதுகின் பின் கொடுத்து warmth தேடும் மகளின் அறிவு என் மனதின் நிறைவு.
நீதி : உறக்கம் போலவே நம்மில் பலர் நாம் தேடும் விடைகள் அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ அட ஏதுவாக தான் இருக்கும் என்று தேடி கொண்டு இருப்போம், உன்மலையில் அது நம் அருகிலேயே இருக்கும். சற்று உள்கூர்ந்து தேடினோமாயின் அதை நாம் உணர்வோம் .
#vtw2_3
Comments
Post a Comment