Posts

Showing posts from February, 2018

இப்படம் இயம்பும் ஈறு

Image
இப்படம் இயம்பும் ஈறு !! இது பெற்றோர்கள் எடுத்த முடிவா இல்லை என்னை தன் போக்கில் இழுத்து செல்லும் விதியின் போக்கா என்றுதெரியவில்லை , ஆனால் எனது பள்ளி படிப்பின் கடைசி 6 வருடங்களும் , எனது இளங்கலை பொறியியல் பல்கலைக்கழகமும் பிராமண ஆதிக்கம் நிறைந்தது . குறிப்பாக, பல்கலைக்கழக வாழ்வு ரொம்பவும் சுவாரசியமானது. விடலை பருவமானது முகத்தில் பருவை பெண்களுக்கும் , அரும்பு மீசையையும் ஒரு அசட்டு தனமான சிரிப்பையும் ஆண்களுக்கு கொடுக்கும்.  அதை உணராமல் ஒரு விதமான கனவுலகிலேயே சஞ்சரித்து கொண்டு இருக்கும் தன்மை அந்த வயது மாணவர்களுக்கு இருந்தது ( என்னையும் சேர்த்து), இது நமக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் நம்மை பெற்றோர் நம் முக மாற்றம் கண்டு காண்டாகி கத்துவது நமக்கு புரிய வாய்ப்பே இல்லை. Back to the track ,  கல்லூரி வளாகத்தில் நுழைந்த உடனேயே நமக்கு சிறுவர் பருவத்தில் இருந்து ஆண் மகன் ஆகி விட்டோம் என்று ஒரு நினைப்பு வேறு, இதற்கு எண்ணெய் ஊற்றும்  விதமாக ரகுமான் அவர்கள் பாடல் வேறு ( பசியை  மரந்தோம் பெண்ணை கண்டு,கவலை மரந்தோம் பெண்ணை கண்டு,கவிதை வரைந்தொம் பெண்ணை  கண்டு - ஹேய் ...