இப்படம் இயம்பும் ஈறு


இப்படம் இயம்பும் ஈறு !!

இது பெற்றோர்கள் எடுத்த முடிவா இல்லை என்னை தன் போக்கில் இழுத்து செல்லும் விதியின் போக்கா என்றுதெரியவில்லை , ஆனால் எனது பள்ளி படிப்பின் கடைசி 6 வருடங்களும் , எனது இளங்கலை பொறியியல் பல்கலைக்கழகமும் பிராமண ஆதிக்கம் நிறைந்தது .

குறிப்பாக, பல்கலைக்கழக வாழ்வு ரொம்பவும் சுவாரசியமானது. விடலை பருவமானது முகத்தில் பருவை பெண்களுக்கும் , அரும்பு மீசையையும் ஒரு அசட்டு தனமான சிரிப்பையும் ஆண்களுக்கு கொடுக்கும்.  அதை உணராமல் ஒரு விதமான கனவுலகிலேயே சஞ்சரித்து கொண்டு இருக்கும் தன்மை அந்த வயது மாணவர்களுக்கு இருந்தது ( என்னையும் சேர்த்து), இது நமக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் நம்மை பெற்றோர் நம் முக மாற்றம் கண்டு காண்டாகி கத்துவது நமக்கு புரிய வாய்ப்பே இல்லை.

Back to the track ,  கல்லூரி வளாகத்தில் நுழைந்த உடனேயே நமக்கு சிறுவர் பருவத்தில் இருந்து ஆண் மகன் ஆகி விட்டோம் என்று ஒரு நினைப்பு வேறு, இதற்கு எண்ணெய் ஊற்றும்  விதமாக ரகுமான் அவர்கள் பாடல் வேறு ( பசியை  மரந்தோம் பெண்ணை கண்டு,கவலை மரந்தோம் பெண்ணை கண்டு,கவிதை வரைந்தொம் பெண்ணை  கண்டு - ஹேய்  க க க.... கல்லுரி சாலை!!)

பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் கற்பக விநாயகர் கோவில் கடலை பிள்ளையார் கோவில் என்று பெயர் மாறி போகும் அளவுக்கு பிரபலம். சாமி கும்பிட போனவர்களை விட மாமி கும்பிட போனவர்களே  அதிகம் எனலாம்.

அப்படி ஒருமுறை கோவில் பிரகாரத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு மாமியை எனது நண்பனும் சுற்றி கொண்டிருக்க சடாரென திரும்பி விட்டார் மாமி , சரி.. மாட்டினோம் டா , இன்னைக்கு என்னைய வச்சு அக்கார வடிசல் பண்ண போறா, disciplinary committee action எடுத்து parents ah கூப்பிட போறாங்க என்று அவன் நினைத்து கொண்டிருக்க மாமி கூறிய வார்த்தைகள் பின் வருமாறு.

" என்னிடம் என்ன கண்டீர்களா தெரிய வில்லை, ஆனால் ஏதோ காரணத்திற்காக ஈர்க்கப்பட்டு என் பின்னே வந்து இருக்கிறீர்கள் , தாங்கள் என் பால் வைத்திருப்பது ஒரு ஈர்ப்பு. அதற்க்கு நன்றி, ஆனால் இதுவே எனக்கு ஒரு பெரிய சிக்கலுக்கு வழி வகுக்கும், பெண்ணை பெற்ற எல்லா தாய் தந்தையும் தனது பெண் சரியாக வளர வேண்டும் என்று சற்று கண்டிப்பாய் இருப்பது இயல்பு , ஆனால் பிராமண சமூகத்தில் அந்த அக்கறை சற்று தீவிரமானது, பெற்றோர் சதா ஜாக்கிரதையாக இருக்கேன் பேர்வழி என்று எங்களை மிகவும் சிறுமை படுத்தி விடுவார்கள், இதையும் மீறி வெளியிடத்தில் படிக்க அனுப்புவது ரொம்பவே பெரிய விஷயம், அப்படி இருக்க இப்படி சங்கடங்கள் வந்தால் சமாளிப்பது ரொம்பவும் சிரமம். பெற்ற  பெண்ணை நம்பாமல் எவனோ சொன்னான் என்று என்னை சந்தேகப்படும் பெற்றோரின் நம்பிக்கை இல்லா தன்மை உங்களால் எனக்கு வேண்டாம் என்று வேண்டி கேட்டு கொண்டு !! போ, போங்கள் , சென்று வாருங்கள் நண்பரே, என்றாவது ஒரு நாள் நாம் மறுபடி சந்திக்க நேர்ந்தால் நாம் முகம் சுளித்து போகாமல் சற்றேனும் புன்னகைத்து போவோம் " என விடை கொடுத்தார் !!

அன்று திருந்திய நண்பன் இன்று வரை ஒரு கண்ணிய புருஷனாக இருக்கிறான் , தன்னை திருத்திய அந்த மாமியை படித்து முடித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரிந்து கொண்டு. !!!!

நீதி: மாற்று பாலின் மீது வரும் இனந்தெரியாத ஈர்ப்பே பாலியல் கொடுமை செய்ய வழி வகுக்கிறது. இதை உணர வைக்கும் அறிவை ஆண்கள் வர்க்கத்திற்கு கொடுக்க சற்று சுணங்கி இருக்கிறான் கடவுள். 

Disclaimer: Not just brahmin community women, but all of them irrespective of their background are subjected to harassment in their life, ஆனால் இது 90 % உண்மை சம்பவம் என்பதால் நான் சதாவை பிராமண பெண்ணாக உங்கள் முன் வைத்துள்ளேன். 


Image may contain: 1 person, closeup



Comments